பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
மிருகசீரிடம் 3, 4: இடைவிடா முயற்சிக்கு பெயர் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். சூரியனால் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். சட்ட சிக்கல்களில் இருந்து வெளி வருவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நட்சத்திர நாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அங்குள்ள குருவால் குருமங்கள யோகம் உண்டாகும். செல்வாக்கு வெளிப்படும். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் ஆரோக்கியம் சீராகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். பெண்களுக்கு இருந்த சங்கடம் நீங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 17. செப். 14.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப். 5,9.
பரிகாரம்: கோமதியம்பிகையை வழிபட குறைகள் தீரும்.
திருவாதிரை: புத்தி சாதுரியமும், திட்டமிட்டு செயல்படும் பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். சம்பாத்தியத்தில் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். சூரியன் ஆட்சியாவதால் முயற்சி வெற்றியாகும். நீங்கள் மேற்கொண்ட வேலை நடக்கும். பிறரால் செய்ய முடியாததை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒருசிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். குருவினால் உங்கள் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தாய்வழி உறவுகள் ஒத்துழைப்பு ஏற்படும். இதுவரை இருந்த எதிர்ப்பு நீங்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பார்த்துவரும் வேலை, செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நோய் நொடிகளால் பாதிக்கப் பட்டிருந்த கணவரின் உடல்நிலை முன்னேற்றமடையும். பொன், பொருள் சேரும். சிறு வியாபாரி, உழைப்பாளிகள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 17,18. செப். 14,15.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 22,23,31. செப். 4,5,13.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் ஆதாயமான மாதம்.குரு, செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாவதால் விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகமும் தடுமாற்றமும் ஏற்படும். குருவின் பார்வையால் இதுவரை சந்தித்த பிரச்னை மாறும். ஆரோக்கியம் சீராகும். இனி எல்லாவற்றிலும் நிம்மதி உண்டாகும். உறவினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உற்சாமுடன் செயல்படும் நிலை ஏற்படும். தடைப்பட்டிருந்த வேலை நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய பொறுப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசு விவகாரம் சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனக்கமான நிலை உண்டாகும். சிறு சிறு பிரச்னைகளால் பிரிந்திருந்தவர்கள் இப்போது ஒன்றிணைவீர். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்யுங்கள்.
சந்திராஷ்டமம்: ஆக. 19. செப்.15.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,23,30. செப். 3,5,12,14.
பரிகாரம்: சூரிய பகவான் வழிபாட்டினால் நன்மை அதிகரிக்கும்.