கோவை; ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் நடைபெற்று வந்த, ‘ஆடி உத்ஸவ்’ ஆன்மிக சொற்பொழிவு நிறைவடைந்தது. இன்று பிட்சு கீதா எனும் தலைப்பில் சொற்பொழிவாளர் பூர்ணிமா பேசுகையில், மனிதன் தனது ஆசையை துறந்தாலே நிம்மதி கிடைக்கும். மன நிம்மதியின்மைக்கு ஆன்மா காரணம் அல்ல. குணம் நல்லதாக இருக்க வேண்டும். நமது ஆத்மா ஏதேனும் ஒன்றில் திருப்தியடைய வேண்டும். மாயையான ஒன்றிற்காக மனதை அலைய விடக் கூடாது. இருக்கும் இடத்தில் கிடைப்பதை கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். முன்னோர் கூறிய வாழ்க்கை நெறிமுறையில், வாழ வேண்டும், என்றார். முடிவில், சங்கத்தின் சார்பில் சொற்பொழிவாளர் பூர்ணிமா, மிருதங்க வித்வான் வடக்கஞ்சேரி சுப்ரமணியம், ஆர்மோனியம் வாசித்த கோவை பெருமாள் ஆகியோர், பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.