சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2024 03:08
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பக்தர்கள் கனவில் சுப்ரமணிய சுவாமி உத்தரவிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். அதன்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இளநீர் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், ‘சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இளநீர், வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போக போக தெரியவரும்’ என்றார்.
பக்தர்கள் கூறுகையில், ‘தென்னை உற்பத்தி அதிகரிக்கும். சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீர் உத்தரவாகியுள்ளதால், விவசாயம் மேம்படும் என்றனர்.