பிளேக் மாரியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 03:08
திருப்பூர்; பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு விழா மற்றும் வராஹி அம்மன் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது. இன்று காலை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், இரண்டாம் கால யாக பூஜை, மஹா கணபதி யாகம், மகா மாரி மூலமந்திர ஹோமம் நடைபெற்றன. காலை, 9:45 மணிக்கு, வராஹி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பிளேக் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.