பதிவு செய்த நாள்
29
ஆக
2024
10:08
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பார்கள். ஏகாதசி என்றாலே அது பெருமாளைப் போற்றும் நாள். காமிகா ஏகாதசியான இன்று பெருமாளை வழிபட மிக சிறந்த தினம். காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணிய த்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத் தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்த மாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார். நம் வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் இறைச்சிந்தனை யில் செலவிட வேண்டும் என்கின்றன ஞான நூல்கள். ஆனால், இந்த உலக வாழ்வில் அது ஞானிகளைத் தவிர மற்றவர்களுக்குச் சாத்தியமே இல்லை. இந்த உலக வாழ்வு பாவ புண்ணியங்கள் நிறைந்தது. அறிந்தும் அறியாமலும் இரண்டையும் செய்யும் தன்மையை உடையது. இதனால் உண்டாகும் தீய மற்றும் நற்பலன்கள் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். நற்பலன்களை மனம் உவந்து அனுபவிக்கும் நாம் தீய பலன்கள் ஏற்படும் போது திகைத்து வருந்துகிறோம்.
நம்மையறியாமல் நாம் செய்த பாவங்கள் நீங்க வழிவகை தேடியலைகிறோம். அப்படி அலையும் மனிதர்களுக்காக நம் முன்னோர்கள் கண்டு சொன்ன உபாயமே விரத நாள்கள்.ஆதிகேசவ பெருமாள் விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதம். இதன் மகிமையை புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசி திதி வரும். ஓர் ஆண்டில் 24 ஏகாதசி திதிகள். சில நேரம் 25-ம் வருவதுண்டு. ஆனால், ஒவ்வொரு ஏகாதசியும் ஒரு சிறப்பான பலனை நமக்கு தரவல்லது. ஒவ்வொரு மருந்தும் ஒரு குறிப்பிட்ட நோயைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு விரதமும் ஒரு சிறப்பான பலனைத் தரும். அப்படி, தாங்கள் அறியாமல் செய்த பாவங்களால் துயருறுபவர்கள் தங்கள் பாவங்கள் தீர்ந்து நற்பலன் களை அடைய உதவும் ஏகாதசி காமிகா ஏகாதசி.
இந்தத் தினத்தின் மகிமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் சொல்கிறது. யார் காமிகா ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்த யாகமான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவார்கள் என்று சொல்கிறது. இத்தனை சிறப்பித்துச் சொல்லப்படும் காமிகா ஏகாதசியின் சிறப்புகளை பிரம்மன் தன் புதல்வரான நாரதருக்குச் சொல்வதாக அமைகிறது.காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார். புண்டரீகாக்ஷ பெருமாள் குருக்ஷேத்திரம் என்பது மகாபாரத யுத்தம் நிகழ்ந்த இடம். ஆனாலும் தர்மத்தை பகவான் கிருஷ்ணன் நிலைநாட்டிய புண்ணிய பூமி. அந்தப் புண்ணிய பூமியில் சூரிய கிரகண வேளையில் செய்யும் கிரியைகள் பல மடங்கு புண்ணியம் அருள்பவை என்கின்றன புராணங்கள். மேலும் பூமி தானம் என்பது மிகவும் உயர்ந்த தானமாகப் போற்றப்படுகிறது. நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும். இன்று நடராஜர், பெருமாளை வணங்குவோம்!.. வளமுடன் வாழ்வோம்..!