காரைக்கால் மாவட்ட கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாகன கோதண்டராமர் கோவில் உள்ளது.இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று 2-ம் காலம், 3-ம் கால பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சீதா,லட்சுமணர், அனுமருடன் உற்சவர் கோதண்டராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம்,சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இன்று கும்பாபிஷேகத்தையொட்டி 4-ம் கால பூஜை முடிவடைந்து பின்னர் யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார் ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் முழுங்க அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து கோதண்டராமர் மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.இதில் குடிமைபொருள் வழங்கத்துறை அமைச்சர் திருமுருகன்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.