Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... பல்லடம் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் பல்லடம் பிரத்தியங்கிரா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளையில் நவராத்திரி தசரா திருவிழா; 12 அம்மன் கோயில்களில் கால்நாட்டு வைபவம்
எழுத்தின் அளவு:
பாளையில் நவராத்திரி தசரா திருவிழா; 12 அம்மன் கோயில்களில் கால்நாட்டு வைபவம்

பதிவு செய்த நாள்

03 செப்
2024
10:09

திருநெல்வேலி; புரட்டாசி மாத நவராத்திரி விழாவிற்காக பாளை 12 அம்மன் கோயில்களில் கால்நாட்டு வைபவம் கோலாகலமாக நடந்தது. மைசூர் தசரா, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக பாளை., தசரா திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா அக்.2ம் தேதி அமாவாசை அன்று பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதை முன்னிட்டு பாளையிலுள்ள 12 அம்மன் கோயில்களில் நேற்று கால்நாட்டு வைபவம் நடந்தது. பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கால்கோள் விழாவிற்கான கொடிகம்பு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு திரிசூலம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க 8 ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஈசானியத்தில் கம்பத்திற்கு மஞ்சள் நீர். நெல் போன்றவை இடப்பட்டு, கால்கோள் விழா நடந்தது. கொடிகம்பத்திற்கும், மூலவர் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது. நேற்று முதல் தசரா முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளது. தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாட்கள்விரதம் இருப்பது, சப்பரங்களை சுத்தம் செய்வது ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறும். பாளை துாத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினி மாகாளி அம்மன், விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன், புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயில்களிலும் கால்நாட்டு வைபவம் நடந்தது. அக். 12ம் தேதி விஜயதசமி அன்று 12 அம்பாள் திருவீதியுலாவும், மகிஷாசூர சம்ஹாரமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar