ராஜ கருப்பராயன் மூலவர் மீது சூரிய ஒளி; தக தகவென ஜொலித்த சுவாமி.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2024 10:09
அவிநாசி; அவிநாசி அருகே காட்டு கருப்பராயன் கோவிலில் உள்ள கருப்பராயன் சிலை மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. அவிநாசி வட்டம், சின்னேரி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் பகுதியில் காட்டு கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் செப் 01ம் தேதி முதல் 5ம் தேதிக்குள், மூலவர் சந்நிதியில் உள்ள ராஜ கருப்பராயன் சிலை மீது சூரிய ஒளி பரவும் ஆபூர்வ நிகழ்வு நடைபெறும். அந்த வகையில், நேற்று காலை 6:12 மணியளவில் சூரிய கதிர்கள் பரவி மெல்ல மெல்ல ராஜ கருப்பராயன் சிலை மீது விழ துவங்கியது. அதன் பின்பு சிலை முழுவதுமாக சூரிய ஒளி படர்ந்து ராஜ கருப்பராயன் சிலை தக தகவென ஜொலித்தது. இதனை அடுத்து மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.