ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2024 10:09
கருமத்தம்பட்டி; செல்லப்பம்பாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கணியூர் அடுத்த செல்லப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பல்வேறு வகையான ஹோம திரவியங்களை கொண்டு, நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. கோபுரம் மற்றும் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கலை நிகழ்ச்சிகள், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில் கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.