ஸ்ரீவைகுண்டம்; நத்தம், விஜயாசன பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவ வழிபாடு நடந்தது. நவதிருப்பதி கோயில்களில், இரண்டாவது ஸ்தலமாகநத்தம் விஜயாசன பெருமாள் கோயில்அமைந்துள்ளது. இக்கோயிலில், பவித்ரோற்சவ வழிபாடுகள், மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்வழிபாட்டின் கடைசி நாளன்று பெருமாளுக்கு சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி, நாலாயிர திவ்யபிரபந்தம், சாயரட்சையுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில், அர்ச்சகர்கள் கண்ணன், ராஜகோபாலன், ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், கண்ணன், அத்யாபகர்கள் திருவாய்மொழிபிள்ளை, திருமலாச்சாரி, சீனிவாசன், பெரியதிருவடி, அனந்தவெங்கடேசன், அறங்காவலர்குழு உறுப்பினர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.