பூணூலை யக்ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு புனிதமானது என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதங்கள் அடிப்படையில், பூணூல் மாற்றும் விழா நடத்தப்படுகிறது. ரிக், யஜுர் வேதத்தை பின்பற்றுபவர்கள் ஆவணி அவிட்ட தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல் அணிவர். முறையாக காயத்ரி மந்திரம் உபநயனம் செய்து பிராமணர்கள் இதை மேற்கொள்வர். இந்த சடங்கு முறைக்கு, ‘உபாகர்மா’ என்று பெயர். ஆவணி ஹஸ்த நட்சத்திர நாளில் சாமவேத உபாகர்மா அனுசரிக்கப்படுகிறது. சாம வேதத்தை பின்பற்றுபவர் புதிய பூணூல் அணிந்து பஞ்சபூதங்களை வழிபடுவர். இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை வழிபட சிறப்பான வாழ்வு அமையும்.