ஆவணி கடைசி செவ்வாய்; குருந்தமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 10:09
கோவை; குருந்தமலை முருகன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி கடைசி செவ்வாய்கிழமையான இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ள குருந்தமலை முருகன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்பம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்துடன் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.