பதிவு செய்த நாள்
10
செப்
2024
12:09
திருப்பதி; திருப்பதியில் நேற்று (செப்.,9ல்)திரு திருநம்பி 1051வ அவதார மஹோத்சவங்கள் சிறப்பாக நடைபெற்றது.
தனது வாழ்நாள் முழுவதையும் ஸ்ரீவாரி கைங்கர்யங்களில் கழித்த ஸ்ரீ திருமலை நம்பியின் பங்களிப்பை அஹோபிலம் மடத்தின் மடாதிபதி ஸ்ரீமான் ஸ்ரீவன் ஷடஹோப ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் சுவாமிகள் பாராட்டினார். தெற்கு மாடத்தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலில் ஸ்ரீ திருமலை நம்பியின் 1051வது அவதாரத் திருவிழாவில் பங்கேற்று, ஸ்ரீ யமுனாச்சாரியாரின் உத்தரவுப்படி திருமலை நம்பி, பழுத்த வயதிலும் தினமும் பாபவிநாசம் சென்று ஸ்ரீவாரி அபிசேகத்துக்கு தண்ணீர் எடுத்து வருவார். ஸ்ரீவாரு தனது தீவிர பக்தரான நம்பிக்கு உதவுவதற்காக அபிஷேகத்திற்காக ஆகாசகங்கையை கொண்டுவந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி சி வெங்கையா சவுத்ரி பேசுகையில், திருமலை நம்பி, தீர்த்த கைங்கர்யம், மந்திர கைங்கர்யம், வேத பாராயண கைங்கர்யம் மற்றும் பிற கைங்கர்யங்களை தொடங்கினார். ஸ்ரீவாரி விருப்பமான பக்தர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் உள்ள உபகோவிலில் மஹோத்ஸவத்தை அனுசரித்து வருகிறது. அதன்பிறகு, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த 16 புகழ்பெற்ற பண்டிதர்கள் திருமலையில் திருமலை நம்பிக்கு அஞ்சலி செலுத்தினர். விழாவில் தேவஸ்தான தர்ம திட்ட திட்ட அலுவலர் ராஜகோபால், ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்ட திட்ட அலுவலர் புருஷோத்தம், திருமலை நம்பி ஸ்ரீ டாடாச்சார்யா கிருஷ்ண மூர்த்தி மற்றும் சி ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.