திருப்புல்லாணி வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 04:09
திருப்புல்லாணி, திருப்புல்லாணி கூத்தியார்குட்டம் ஊருணி அருகே வெட்டுடையாள் காளியம்மன் கோயில் உள்ளது. மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் வெட்டுடையாள் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜகர் நாகராஜன் செய்திருந்தார். திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி உட்பட பலர் பங்கேற்றனர்.