காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 04:09
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஆலடி தோப்பு, இந்திரா நகர், துர்க்கை அம்மன் கோவிலில், ஆகாய கன்னியம்மனுக்கு 16வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் தனி சன்னிதியில் உள்ள செல்வ கணபதிக்கு, கடந்த 7 மற்றும் 8ம் தேதி, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு ஆகாய கன்னியம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகாய கன்னியம்மன் வீதியுலா வந்தார்.