காரைக்கால் ரேணுகாதேவி அம்மன் கோவிலில் பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 04:09
காரைக்கால்; காரைக்கால் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவது வழக்கம். இந்தாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரேணுகாதேவி அம்மனுக்கு பால் குடம், காவடி மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மீனவ பஞ்சாயத்தார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.