கீழக்கரை; கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட கும்பிடு மதுரையில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சூரிய சந்திர சிவ பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:30 மணிக்கு கடம் புறப்பட்டு மூலவர் முத்துமாரியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கீழக்கரை காசிநாதன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக தலைவர் வையச்சாமி, செயலாளர் முத்துராமன், பொருளாளர் கணேசன், தண்டல்காரர் சவுந்தரபாண்டி, பூஜகர் சிலையான் உட்பட பலர் பங்கேற்றனர்.