Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3 நாட்களில் 4.32 லட்சம் விநாயகர் சிலை ... கோவை வேணுகோபால சுவாமி கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் கோவை வேணுகோபால சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகிரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருமலை திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தேவகிரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருமலை திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

11 செப்
2024
12:09

பெங்களூரு; பனசங்கரியில் உள்ள புகழ்பெற்ற தேவகிரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருமலைக்கு வழங்கும் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


திருமலையில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு, ஹிந்து ஆத்யாத்மிகா சேவா அறக்கட்டளை சார்பில் திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. நடப்பாண்டு, நான்காம் ஆண்டு விழாவுக்காக கடந்த 8ம் தேதி, பனசங்கரி 2வது ஸ்டேஜ் ஸ்ரீவரபிரதா தேவகிரி வெங்கடேச பெருமாள் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக திருக்குடைகள், பாதுகைகள், சங்கு, சக்கரம், சடாரி ஆகியவை பனசங்கரியின் முக்கிய வீதிகள் வழியே, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பஜனை பாடல்கள் பாடிய படி, கோலாட்டம் ஆடியபடி பெண்கள் வந்தனர். திருக்குடைகளுக்கு அறக்கட்டளை செயலர் வி.சீனிவாச மூர்த்தி இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலர்ந்த பழங்கள், மஞ்சள், குங்குமம், கருடபுராணம் புத்தகம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. அறக்கட்டளை கவுரவ தலைவர் எம்.ஜி.ஆர்., மணி, நாகை ஸ்ரீமகா வராஹி பீடத்தின் பூர்ணிமா சுகுமார், அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


19ல் பெங்களூரில் இருந்து புறப்பாடு; வரும் 19ம் தேதி காலை, பெங்களூரில் இருந்து புறப்படும் திருக்குடைகளுக்கு, 20ம் தேதி சேலத்திலும் 21ம் தேதி கரூரிலும் பூஜை நடத்தப்படுகிறது. வரும் 30ம் தேதி திருப்பதிக்கு குடைகள் சென்றடையும். அங்கு பரகால மடத்தில் பூஜை செய்யப்பட்டு, அக்., 1ம் தேதி வசந்த மண்டபத்தில், கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும். வரும் 19ம் தேதி வரை, அறக்கட்டளை அலுவலகத்தில் திருக்குடைகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும் விபரங்களுக்கு சங்க செயலர் சீனிவாச மூர்த்தியின் 80508 38605 மொபைல் எண்ணில் கேட்டு அறியலாம். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar