கோவை வேணுகோபால சுவாமி கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2024 12:09
கோவை; ஆவணி மாதம் கடைசி புதன்கிழமையை முன்னிட்டு கோவை கணபதி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் பாமா ருக்மணி சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேணுகோபால சுவாமி மற்றும் பாமா ருக்மணி தாயாரை தரிசனம் செய்தனர். இதேபோல், கோவை சுந்தராபுரம் ராஜநாராயணன் காலனி திருமூர்த்தி கோவிலில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வேணுகோபால சுவாமி காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.