உத்திரமேரூர் கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 03:09
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் பழமையான கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை நேரங்களில், அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 10:00 மணிக்கு, குடம் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, குடம் அலங்காரத்தில் அம்மனின் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பம்பை உடுக்கை அடித்து அம்மனை வர்ணித்து பாடல்கள் பாடப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.