பிரபஞ்ச சிற்பி.. விஸ்வகர்மா ஜெயந்தி விழா; ஏகாம்பர சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 01:09
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரத்தில் உள்ள ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் நடத்திய ஆறாம் ஆண்டு பிரம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பிரபஞ்சத்தின் முதல் கட்டடக் கலைஞராக விஸ்வகர்மா கருதப்படுகிறார். விஸ்வம் என்பதற்கு உலகம் எனவும், கர்மா என்பதற்கு படைப்பவர் என்றும் பொருள்படுகிறது. பிரபஞ்ச சிற்பி என்று வேத நுால்கள் கூறுகிறது. உலகின் பிரதான கட்டடக்கலைஞரும், தெய்வீக தச்சருமாக பிரம்மாவின் மகனான விஸ்வகர்மாவை வழிபடுகின்றனர். இரும்பு, மரம், உலோகம், கல் சிற்பம், தங்கம் போன்ற மூலப் பொருட்களை வைத்து ஐந்து தொழில்கள் உருவாகின. இதனடிப்படையில் விஸ்வகர்மா பிரம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. விஸ்வகர்மாவின் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை சமுதாயத் தலைவர் மங்களநாதன், ஆசாரி சங்கத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் விஜி, நேதாஜி மற்றும் ரெகுநாதபுரம் விஸ்வகர்மா விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.