திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புரட்டாசி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 03:09
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாத தீர்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. காசிக்கு நிகரான சிறப்பு மிக்க இக்கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.