பதிவு செய்த நாள்
17
செப்
2024
04:09
கோத்தகிரி; கோத்தகிரி மடித்தொறை கோபாலகிருஷ்ணர் கோவிலில் உரியடி உற்சவம், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை ஒட்டி, 15ம் தேதி, காலை, 7:30 மணி முதல், 8:00 மணி வரை, கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடி மர அபிஷேகம், கொடியேற்றம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ கோபாலகிருஷ்ணர் அபிஷேகம், பஜனை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு, 1:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, ஐயனின் திருவீதி உலாவும், 7:00 மணிக்கு, உறியடி உற்சவம் நடந்தது. இரவு, 10: 00 மணிக்கு, ஹரிஹரன் பஜனை சங்கத்தாரின் விதியா மதியா என்ற படுகு மொழி நாடகம் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு நடந்த பட்டாபிஷேகத்தை தொடர்ந்து, 10:30 மணிக்கு, கருட வாகனத்தில் ஐய்யனின் திருவீதி உலா நடந்தது. கோவிலை சுற்றி வலம் வந்த ஐயனை, ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன், சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.