பதிவு செய்த நாள்
18
செப்
2024
10:09
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கிரிவலம் கடந்த ஆறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம், கொரோனா போன்ற காரணங்களால், நடைபெற்றாமல் இருந்தது. தொடர்ந்து கிரிவலம் மீண்டும் துவங்க அரண்மனை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை வைத்தினர். இதையடுத்து, அரண்மனை தேவஸ்தானம், இந்திய தொல்லியல் துறை அனுமதியோடு பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு குடிநீர், கழிவறை, தற்காலிக மின் விளக்குகள் ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டது. தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலத்தினை அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கும்பகோணம் கண்ணன் அடிகளார், மாநகராட்சி கமிஷனர் கண்ணன், அழகிய தஞ்சாவூர் 2005 திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுமார் மூன்று கிலோ மீட்டர் துாரமுள்ள பெரிய கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனர்.