காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் நடைபெற்ற பவித்ரோற்சவத்தின் நிறைவடைந்தது.
நிறைவு நாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை கோவில் வளாகத்தில் உள்ள துணை சன்னதிகளில் வீற்றிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் பவித்ர மாலைகளை கோயில் அர்ச்சகர்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கலசங்களை கோயில் அர்ச்சகர்கள் தலைமீது சுமந்து கோயிலில் ஊர்வலமாக கொண்டுச் சென்று துணை சன்னதிகளில் பவித்ர மாலைகளை அணிவித்து கலசங்களில் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு துணை சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கும் பவித்ர மாலைகளை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான துணை சன்னதிகள் உள்ளன அவற்றின் அனைத்து தெய்வங்களுக்கும் ஆண்டுதோறும் கோயிலில் நடக்கும் பவித்ரோற்சவத்தில் சிறப்பு பூஜைகள் செய்த பவித்திர மாலைகளை கோயிலில் ஊர்வலமாக மேள தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன் எடுத்துச் சென்று, அனைத்து சன்னதியிலும் உள்ள தெய்வங்களுக்கும் கோயில் பிரதான அர்ச்சகர்கள் பவித்திர மாலையை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இதே போல் இந்தாண்டும் தேவஸ்தான செயல் அலுவலர் மூர்த்தி மற்றும் துணை செயல் அலுவலர் கிருஷ்ணா ரெட்டி ஆகியோருக்கும் பவித்ர மாலைகளை அணிவித்து வழிபாடு செய்தனர்.