நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கணபதி சன்னதி கட்டுமானப் பணிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2024 11:09
மேட்டுப்பாளையம்; காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடைபெறும், கணபதி சன்னதி கட்டுமான பணிகளை, அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு செய்தார்.
காரமடையில் மிகவும் பிரசிபெற்ற, அரங்கநாதர் கோவில் அருகே, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கணபதி சன்னதி கட்டப்பட்டு வருகின்றன. தற்போது மிகுந்த வேலைப்பாடுகளுடன் கல்காரப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது கோவில் செயல் அலுவலர் சந்திரமதியிடம், பணிகள் எவ்வளவு நடந்துள்ளது, எப்போது முடியும். விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுங்க, என்றார். இந்த ஆய்வில் காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.