சீர்காழி, சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2024 09:10
மயிலாடுதுறை; சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அஷ்டலட்சுமி பூஜை யாகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 7ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி அஷ்டலட்சுமி குபேர மகா யாகம் நடைபெற்றது. அஷ்டலட்சுமி குபேர எழுந்தருள அவர்களுக்கு முன்பாக பிரமாண்ட 61 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மகா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.