Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... நவராத்திரி சுவாமி விக்ரகங்களுக்கு களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு நவராத்திரி சுவாமி விக்ரகங்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை நவராத்திரி இரண்டாம் நாள்; பராசக்தியை வணங்கினால் பரம நிம்மதி ஏற்படும்
எழுத்தின் அளவு:
நாளை நவராத்திரி இரண்டாம் நாள்; பராசக்தியை வணங்கினால் பரம நிம்மதி ஏற்படும்

பதிவு செய்த நாள்

03 அக்
2024
04:10

சத்தியவதியின் குமாரரான வேதவியாசர், சரஸ்வி நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆணும், பெண்ணுமாக ஊர்க்குருவிகள் இரண்டு ஒருங்கே அமர்ந்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன.


அதை கண்ணுற்ற வியாசர், இந்த ஊர்க்குருவிகள் கூட மக்கட்பேற்றை விரும்புகின்றன. இவற்றிற்கு குஞ்சு பிறந்து கர்மாவா செய்யப் போகிறது? பித்ருக்களுக்கு இது என்ன நன்மை செய்யும்? கயைக்கு சென்று சிராத்தம் செய்யப் போகிறதா? இப்படியெல்லாம் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தும், இவ்வூர்க் குருவிகள் மகப்பேற்றை விரும்புகின்றனவே? எனக்கோ புத்திரன் இல்லை. பரலோக கர்மாக்களை எனக்கு யார் செய்யப் போகின்றனர்? இவ்வளவு நுால்களை இயற்றிய வியாசர் பிள்ளையில்லாதவர் என்று கூறி உலகம் இகழுமே... புத்திரன் இல்லாதவர் புத் எனும் நரகத்தை அடைவரே... மக்கள் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை என்று நானே என் நுால்களில் சொல்லியிருக்கிறேன். என் மனம் கலங்குகிறதே... மனக்கலக்கத்தை போக்கிக் கொள்ளும் வழி என்ன? என்று சிந்தித்தார்.


அங்கே நாரதர் வரவே, இவ்வளவு காலத்திற்குப் பின், புத்திரர் வேண்டும் என்று ஆசை எழுகிறது. இக்கலக்கம் நீங்கவும், புதல்வன் உண்டாகவும் நான் யாரை குறித்து தவம் செய்யலாம்? என்று பக்தி சிரத்தையுடன் கேட்டார். மன அமைதி பெற, ஒரு முறை என் தந்தை பிரம்மா, திருமாலிடம் கேட்டபோது, மது கைடப வதம் செய்வதற்கு முன் நான், பராசக்தியை நோக்கி தவம் செய்தேன். அதைச் செய் என, அறிவுரை கூறினார். எனவே, நீங்களும் அதே போல் செய்யுங்கள் என்றார் நாரதர். வியாசரும் அதைச் செய்து மன அமைதி பெற்றாலும், குழந்தை வேண்டும் என்ற ஆசை அடங்கவில்லை. ஒருநாள், யாகம் செய்யத் துவங்குவதற்காக தீ மூட்ட, அரணிக் கட்டையைக் கடையத் துவங்கினார். அப்போது, ஊர்வசி எதிரில் வரவே, அவள் மீது மனம் பறிகொடுத்தார் வியாசர். காமத்தை அடக்க முடியவில்லை; ஆனால் ஊர்வசி கிளி ரூபம் எடுத்துப் பறந்து விட்டாள். அக்கிளியைப் பார்த்தபடியே அரணிக் கட்டையைத் தேய்த்தபோது, வீரியம் சிறிது அக்கட்டை மீது விழவே, ஆண் குழந்தை ஒன்று உருவாயிற்று. அதற்கு சுகர் என்று பெயரிட்டார் வியாசர்.


சுகர், சிறந்த புத்திமானாகவும், அதிக ஒளியுடனும் திகழ்ந்தார். அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் வியாசர். சுகர் இதற்கு சம்மதிக்கவில்லை. பிரம்மஞானம் தேவை எனக்கு என்றார் சுகர். அப்போது, ஜனக மகாராஜாவைச் சந்திக்கச் சொன்னார் வியாசர். சுகரும் அதற்கு இணங்கி, ஜனகருடைய தரிசனம் பெற்றுவர சென்றார். நுால்களை படித்து பெற்ற அறிவால் மட்டும் பிரம்ம ஞானம் வந்துவிடாது என்பதை உணராத சுகர், ஜனகருடைய அரண்மனையை அடைந்து, அங்கு காவல்புரியும் ஏவலாளர், பணிப் பெண்டிர், அந்தப்புர மகளிர் ஆகியோருடன் பேசி, பிரம்மஞான விஷயமாக பலவற்றை அறிந்தார்; அதன்பின் அவர் ஜனக மகாராஜாவை அணுகி, பல உபதேசங்களை பெற்றார். இவ்வாறு கேட்டவற்றால் அவர், ஓர் உண்மையை உணர்ந்தார்... ஒருவனுக்கு இயல்பாகவே வைராக்கியம் ஏற்பட்டால், அவனை யாராலும் மாற்ற முடியாது; ஒருகால் அவனுடைய வைராக்கியத்திற்கு சலனம் நேரிட்டால், அதற்கு அவனது பலவீனமான மனமே காரணமாக இருக்கும். மனத்திண்மை இருந்தால், ஒருவனை, எந்த நிகழ்ச்சியும் மாற்றிவிடாது என்பதே அது. பின், ஜனகருடைய அறிவுரையின்படியும், தந்தையின் விருப்பத்திற்கேற்பவும் திருமணம் செய்து கொள்ள உடன்பட்டார். ஆயினும், ஜனகர் எப்படி அரசாட்சி செய்தபடி, தாமரையிலை மேல் தண்ணீர் போல் வாழ்ந்தாரோ, அப்படியே தானும் தன் மனதை கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்று, சுகர் உறுதி பூண்டார். அதன்பின் அவர், பீலி எனும் மங்கையை மணந்து கொண்டார். அப்பெண் வாயிலாக, நான்கு புதல்வர்களும், ஒரு பெண்ணுக்கு பிறந்தனர். வியாசரும் மனம் மகிழ்ந்தார். சுகர், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தக்கபடி நிறைவேற்றி வைத்தார். பின், யாதொரு கவலையும் இன்றி, தெளிந்த மனதுடன் தவம் செய்ய சென்று விட்டார்! 


நவராத்திரியின் இரண்டாம் நாளான நாளை, கவுமாரியாகவும், பிரம்மசாரிணியாகவும் காட்சி தரும் அம்பிகைக்கு உகந்த நிறம், அடர்நீலமாக கருதப்படுகிறது. அம்மனை இன்று துளசி மற்றும் முல்லையால் அலங்கரித்து, புளியோதரை, பயத்தம் பருப்பு சுண்டலை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரு லட்சத்து எட்டு வடை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் மார்கழி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை; பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை 2000 லிட்டர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar