கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் நவராத்திரி கொலு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2024 11:10
கோவை; நவராத்திரி பண்டிகை தொடங்கியதை யொட்டி கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் கொலு பொம்மை தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது வரும் விஜயதசமி அன்று நிறைவடைகிறது. இந்த கொலுவில் விதவிதமான பழங்கால பொம்மைகள் மற்றும் பகதர்களை கவரும் சுவாமி சிலைகள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் விளையாட்டு பொம்மைகள் ஆகியன மிக பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு காலை 9 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் கொலு பொம்மை கண்காட்சியை தரிசிக்கலாம். இந்த நிகழ்ச்சியையொட்டி துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.