பதிவு செய்த நாள்
04
அக்
2024
11:10
சேத்துார்; சேத்துார் அருகே சொக்கநாதன் புத்துாரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு மாரியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்களில் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொக்கநாதன் புத்துாரில் முப்புடாதி அம்மன், வடகாசி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் அதனைத் தொடர்ந்து குடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு தண்டியல் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக அக்.11ல் பூக்குழி நடக்கிறது. விழாக்காலங்களில் பல்வேறு வாகனங்களில் தினமும் அம்மன் காட்சியளிப்பதுடன் திருவாசக வேள்வி, அக்னி சட்டி, முளைப்பாரி உலா, விளையாட்டு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
* மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. தினமும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சி, சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக அக். 11ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை உறவின்முறை மகுமை பண்டு விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.