Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ... சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு! சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் புனித பயண திட்டம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2012
10:11

சென்னை: அரசு சிறப்பு நிதியுதவியுடன் கூடிய, ஜெருசலேம் புனிதப் பயண திட்டத்தை. அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் செயல்படுத்த அரசு முடிவெடுத்து, விண்ணப்பங்களை கோரியுள்ளது. சிறுபான்மையினர் நல கமிஷனர் தங்க ஸ்வாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமிய மக்களின், ஹஜ் புனித பயணத்திற்கு, தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது. இதுபோல், கிறிஸ்தவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் இருந்து, இஸ்ரேலின் ஜெருசலேம் சென்று வருவதற்கு, ஒரு நபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம், ஆண்டொன்றிற்கு, 500 கிறிஸ்தவர்களுக்கு, நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில், "ஜெருசலேம் புனித பயணக்குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஜெருசலேமை மையமாகக் கொண்டு, பெத்தலஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் உள்ளிட்ட இடங்களை இப்பயணம் உள்ளடக்கியது. இப்புனித பயணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரி முதல் மே வரை நடத்த, அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் துவங்கி, சென்னையில் முடியும் இந்த பயணத்திற்கான விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை, அடுத்த மாதம், 5ம் தேதி மாலை, 5:45க்குள், அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
போடி; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை ஐயப்ப பக்த சபை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar