திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 11:10
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. இக்கோயிலில் நவராத்திரி விழா, புரட்டாசி சனி உத்ஸவ நிறைவை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து யாகசாலையில் 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா யாக பூஜைகள் நடந்தது. பின்னர் பூர்ணாகுதி நடந்து பிரதானகலசத்திற்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் திருக்கல்யாணத்திறகான சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ராஜகோபுரம் முன்பாக மாலை மாற்றுதல், ஊஞ்சலில் எழுந்தருளல் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க இரவு 8:15 மணிக்கு பெருமாளுக்கும் ஸ்ரீதேவி,பூதேவியருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் திருக்கல்யாண விருந்து நடந்தது. பின்னர் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை தாமரைக்குழுமத்தினர் செய்தனர்.