சதுரகிரியில் கனமழை; பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி மலையில் கனமழை பெய்து வருவதால் புரட்டாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
இக்கோயிலில் நாளை (அக்.15) புரட்டாசி மாத பிரதோஷம், அக். 17ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்கள், அந்தந்த நாட்களில் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்க வனத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 3:00 மணி முதல் சதுரகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்துள்ளதாலும், தொடர்ந்து மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சதுரகிரிக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.