காங்கயம் பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த 4 ம் தேதி, நவராத்திரி விழா துவங்கி, 10 நாட்கள் நடந்தது. தினசரி மாலை, பூஜை மற்றும் பகவதி சேவா நடந்தது. அக். 11 ம்தேதி துர்காஷ்டமி, 12 ம்தேதி மகா நவமி பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை, 5:00 மணிக்கு விஜய தசமி பூஜை துவங்கியது. காலை, 5:30 மணிக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 75 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி வித்யாரம்பம் செய்து வைத்தார். பூஜையில் வைக்கப்பட்டிருந்த, புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில்களை வழங்கி ஆசி வழங்கப்பட்டது. பரத நாட்டிய கலைஞர்களின் சலங்கைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பஜனை மற்றும் அன்னதானம் நடந்தது.