மேதலோடை பதினாறு பிள்ளை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 03:10
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே வடக்கு மேதலோடையில் உள்ள பதினாறு பிள்ளை காளியம்மன் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. அனுக்ஞை விநாயகர், வாஸ்து பூஜை, யாகசாலை பிரவேசம், கோ, தன பூஜை, பூர்ணஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. பதினாறு பிள்ளை காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சந்திரசேகர சாஸ்திரிகள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு மேதலோடை கிராம மகளிர் மன்றம், இளைஞரணி மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.