பஞ்சாமிர்தம் ஏற்றிச் செல்லும் பழநி கோயில் ரோப்கார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2012 10:11
பழநி: பழநி கோயில் ரோப்கார் மூலம் பஞ்சாமிர்தம், பூஜை பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. பழநிகோயில் ரோப்கார் இரும்புவடக்கயிறு மாற்றம் செய்வதற்காக, நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து, மலைக்கோயில் சென்று வருகின்றனர். மூன்று வின்ச்களில், தற்போது இரண்டு மட்டுமே இயக்கப்படுகிறது. பஞ்சாமிர்தம், மற்றும் இதர பூஜைப்பொருட்களை வின்ச் மூலம் கொண்டு செல்வதால், மேலும் கூடுதல் நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே உள்ள பழைய இரும்பு வடக்கயிறு மூலம், ரோப்கார் பெட்டி மூலம் பஞ்சாமிர்தத்தை மலைக் கோயிலுக்கு ஏற்றிச் செல்கின்றனர். டிச., முதல் வாரத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் தயாராகிவிடும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.