பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
சென்னை: மேற்கு ஆப்ரிக்காவின் காம்பியா, லைபீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்கான, போப்பின் வாடிகன் திருப்பீடத் தூதரான ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின், புதிய பிஷப்பாக, போப் பெனடிக்ட் நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று முன்தினம், மாலை, 4:30 மணிக்கு, வாடிகனில் வெளியிடப்பட்டது. ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை, மயிலை உயர் மறைமாவட்டத்தின் ஆறாவது பிஷப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்கிறார். இத்தகவலை, சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின் வேந்தரும், பாதிரியாருமான சார்லஸ் குமார் வெளியிட்டுள்ளார்.