Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறுக்குத்துறை முருகன் கோயிலில் ... நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா; செப்பு தேரில் காந்திமதி அம்மன் வீதி உலா நெல்லையப்பர் கோவில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை., முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
குலசை., முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி வசூல்

பதிவு செய்த நாள்

26 அக்
2024
10:10

உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உண்டியல் மூலம், ரூ.4 கோடியே 57 லட்சம் வசூலானது. குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த அக். 3ம் தேதி துவங்கி அக். 12ம்தேதி வரை நடந்தது. துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர்,வேடம் அணிந்து கிராமம், கிராமமாகச் சென்று காணிக்கை பிரித்து, கடைசி நாளில் முத்தாரம்மன் கோயிலில் செலுத்தினர். இந்த காணிக்கைகளை, கடந்த 5 நாட்களாக எண்ணும் பணி நடந்து வந்தது. இதில், 18 நிரந்தர உண்டியல்களும், தசரா திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்களும் எண்ணப்பட்டன. சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் மற்றும் செயல்அலுவலர் கோமதி, குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் தலைமையில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், பக்தர்கள் காணிக்கையாக, 4 கோடியே 57 லட்சத்து 23ஆயிரத்து 30 ரூபாயும்,115 கிராம் 300 மிலி., தங்க பொருட்களும், 2,689 கிராம் 900 மிலி.,வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர, 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக, 46 லட்சத்து ஆயிரத்து 514 ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், ஆய்வர் பகவதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், அறங்காவலர்கள் மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar