Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொட்டி கிடந்த பணம் ஜென்மம் எடுத்த பலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை சிவனும் அவரது அம்மாவும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2012
10:11

""தாயும் தந்தையும் இல்லாதவன் இறைவன், ஆனால், அவன் அம்மையப்பனாக இருக்கிறான், என்று படித்திருக்கிறோம். ஆனால், கன்னட மக்கள் பெச்சம்மா என்பவரை சிவனின் தாய் என்கிறார்கள். கன்னட மொழியில் உள்ள வசவ புராணத்தில், சிவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற இந்தப் பெண்ணின் கதை கூறப்பட்டுள்ளது. வீரசைவ மரபில் பிறந்த பெச்சமதேவி சிவனின் தீவிர பக்தை. குழந்தை கிடையாது. சிவனையே குழந்தையாக எண்ணி வாழ்ந்தாள். ""அட சிவனே! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் கட்டிக் கொண்டு உன்னை திரிய விட்டிருப்பாளா! நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண்போல் பார்த்துக் கொள்கிறேன், என கண்ணீர் வடிப்பாள்.  சிவனும் குழந்தையாக மாறி, அவள் வீட்டின் முன் கிடந்து அழத் தொடங்கினார். அனாதையாய் கிடந்த பிள்ளையை, பெச்சம்மதேவி, கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல்... உஷ்ணம்  ஏறிக்கொண்டே போனது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. படுத்த படுக்கையானது. பிள்ளையைக் காண வந்த பெண் ஒருத்தி, ""அடியே! நீ பெற்றபிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்க வேண்டியது தானே! என்று ஏளனமாகப் பேசினாள். மனம் நொந்த பெச்சமதேவி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அரிவாளை கழுத்தருகே கொண்டு வந்தாள். "அம்மா அவசரப்படாதே என்று வாய் திறந் தார் குழந்தை சிவன். தன் சுயரூபத்தையும் காட்டி, அவளுக்கு முக்தி அளித்தார். ஈசனே அம்மா என்று அழைத்ததால், "பெச்சம்மா (அன்னையருக்கெல்லாம் அன்னை) என பெயர் பெற்றாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar