பதிவு செய்த நாள்
01
நவ
2024
08:11
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி, ஏழுமலையான் கோவிலில், தங்க வாசலுக்கு அருகில் உள்ள, கண்டா மண்டபத்தில், தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு நேற்று (அக்.,31ம் தேதி) காலை 7:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள், கண்டா மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட, சர்வ பூபாள வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தளினார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியஜீயர் ஸ்வாமி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயர் ஸ்வாமி, பிரதான அர்ச்சகர்கள் ஸ்ரீ கோவிந்தராஜ தீட்சிதர்கள், ஆகம ஆலோசனைதாரர் ஸ்ரீ ராமகிருஷ்ண தீட்சிதர்கள், முதன்மை அர்ச்சகர்கள் கிரண் ஸ்வாமி, அடிஷனல் ஈவோ சி.ஹெச்.வெங்கய்ய சௌதரி, சி.வி.எஸ்வோ ஸ்ரீதர், டெப்யூடி ஈவோ லோக ராமகிருஷ்ணா, பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.