பதிவு செய்த நாள்
01
நவ
2024
09:11
தேனி; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நகர் பகுதியில் உள்ள பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம்; பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரதராஜப் பெருமாள் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், வரசித்தி விநாயகர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி : சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திர காளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிவப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.