திருமலைக்கேணி கந்தசஷ்டி விழா; முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2024 11:11
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கோமாதா பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கந்தசஷ்டி திருக்கொடி ஏற்றப்பட்டது.பின்னர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவில் கம்பிளியம்பட்டி ஊராட்சி தலைவர் விஜயாவீரச்சாமி, செங்குறிச்சி ஊராட்சி தலைவர் மணிமாறன் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் இன்று முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், நாளை சிவ உபதேச திருக்காட்சியும், நவ 5-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல் நிகழ்ச்சியும், நவ.6 ல் வேல்வாங்கும் திருக்காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் 8-ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.