பதிவு செய்த நாள்
07
நவ
2024
10:11
பெங்களூரு; கல்யாண் நகர் ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில், உலக நன்மைக்காக, ‘அதிருத்ர மகாயக்ஞம்’ துவங்கியுள்ளது. ‘ஹிருதய ஸ்பந்தனா’ என்ற அமைப்பு சார்பில், உலக நலனுக்காக அதிருத்ர மகாயக்ஞம் கடந்த 4ம் தேதி துவக்கியது. இத்துடன், ஷத சண்டி ஹோமம், சதுர்வேத பாராண்யம் நடத்தப்படுகிறது. பெங்களூரு கல்யாண் நகர் சமஸ்கிருதம் மற்றும் கலாசார அறக்கட்டளை வளாகத்தில் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. தினமும் 121 வேத பண்டிதர்கள் ஸ்ரீருத்ரம் பிரார்த்திக்கின்றனர். 11 நாட்களுக்கு 14,641 முறை பிரார்த்திப்பர். 10 வேத பண்டிதர்கள், நான்கு நாட்களுக்கு 100 முறை துர்கா சப்தசதியை பாராயணம் செய்து, ஷத சண்டி யாகத்துடன் நிறைவு செய்வர். ஏழு நாட்களுக்கு 30 வேத அறிஞர்கள், அனைத்து வேதங்களையும் ஓதுவர். இந்த யாகத்தில் பங்கேற்க விரும்புவோர், யாகசாலை பகுதியில் அமரும் ஆண்கள் வேஷ்டி, அங்கவஸ்திரம் கட்டாயம் அணிய வேண்டும். மற்றவர்கள் வேஷ்டி, குர்தா அல்லது சட்டை, சிறுவர்கள் வெள்ளை சட்டை, பேன்ட் அல்லது குர்தா பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அணிந்து பங்கேற்கலாம். சல்வார் கமீஸ் அணிந்த பெண்கள், துப்பட்டாவுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 96637 18977, 90084 41193 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.