சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2024 11:11
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னையில் மிகவும்பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினந்தோறும்நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சூரசம்ஹாரம், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடப்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விழாவையொட்டி இன்று சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு 119 இசைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடல் நிகழ்வு நடைபெற்றது. குளத்தூரிலிலுள்ள கபாலீஸ்வரர் கோயில் இசை கல்லூரி மாணவர்களும், பூந்தமல்லி சாலையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் இசைப்பள்ளி மாணவர்களும் கலந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்தனர்.