பதிவு செய்த நாள்
07
நவ
2024
03:11
கோவில்பாளையம்; குரும்பபாளையம், சுயம்புவாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில்பாளையம் அருகே, குரும்பபாளையம், ஸ்ரீ வேதவல்லி சமேத சுயம்பு வாத பெருமாள் கோவிலில், விமானம், மண்டபம் மற்றும் பரிவார சன்னதிகள் புனரமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. கடந்த 6ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடந்ன. இன்று காலை புனித நீர் அடங்கிய குடங்கள் வேள்விச்சாலையில் இருந்த கோபுரம் மற்றும் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 10: 30 மணிக்கு, மூலவர், விமானம், சொர்க்கவாசல் விமானம், பரிவார மூர்த்திகள், கன்னிமூல கணபதி மற்றும் சுயம்பு வாத பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. 8ம் தேதி முதல் மண்டல பூஜை நடைபெறும், என நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவில், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார், திருப்பணி குழு உறுப்பினர்கள் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.