பதிவு செய்த நாள்
26
நவ
2012
09:11
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி, திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு, இன்று(நவ.,26) பட்டாபிஷேகம் நடக்கிறது.இத்திருவிழா நவ.,19ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். நேற்று தந்தத்தொட்டி வாகனத்தில் நடராஜமூர்த்தியும், சிம்மாசனத்தில் சிவகாமி அம்மனும், கமாதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும் புறப்பாடாகினர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவார்.இன்றிரவு 7.15 முதல் 7.30 மணிக்குள், முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை 11 மணிக்கு தேரோட்டம், மாலை 6 மணிக்கு கோயிலுக்குள் பால தீபமும், மாலை 6.15 மணிக்கு, மலைமேல் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதற்காக, நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை தயாராக உள்ளது.