சுயம்பு பெருமாள் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2024 04:11
வடமதுரை; வடமதுரை கொல்லப்பட்டி பெருமாள்மலை உச்சியில் சுயம்பு பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு சில ஆண்டுகள் முன்னர் வரை முறையான பாதை வசதியின்றி ஒற்றையடி பாதையில் மலை உச்சிக்குச் சென்று பக்தர்கள் வழிபட்டனர். தற்போது கொல்லப்பட்டி, ஜி.புதுார், எம்.வி.நாயக்கனுார் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மலை உச்சி வரை பாதை அமைத்ததுடன், கோயிலில் திருப்பணி செய்து முன்மண்டபமும் கட்டியுள்ளனர். நவ.14ல் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று காலை மஹா சுதர்சன ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கியது. சுற்று வட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.