அண்ணாமலையார் கோயிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2024 11:11
திருவண்ணாமலை; அண்ணாமலையார் கோயிலின் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு 50 கிலோ அரிசி, கேரட், பீன்ஸ் வாழைக்காய், தக்காளி, வெண்டைக்காய், கோஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை விமர்சையாக நடைபெற்றது. இறைவனை அன்ன ரூபமாக கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் பசிப்பிணி இல்லாமல் நோய் நொடி இல்லாமல் மக்கள் எப்போதும் பஞ்சம் இல்லாமல் வாழ்வதற்கு அன்னாபிஷேகம் நடத்துவத் முக்கியமானதாக கருதப்படுகிறது. சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றுக்கு மேலாக கருதப்படுவது அன்னாபிஷேகம். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமியன்று ஆகம முறைப்படி அனைத்து சிவன் ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதியில் 150 கிலோவில் சாதம் வடித்து காய்கறிகள் படையல் இட்டு தீபா ஆராதனைகளுடன் கூறி அன்னாஅபிஷேகம் நடைபெற்றது. இந்த அன்னாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான கிரிவலம் சென்ற பக்தர்கள் கண்டு தரிசித்து சென்றனர்.