பதிவு செய்த நாள்
23
நவ
2024
10:11
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது பூரண புஷ்கலா அய்யனார் கோயில். இங்கு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அய்யன் என்றால் மேலானவர். அதாவது தலைவன், குருநாதர். இவரை குருவாக ஏற்றால் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக துணை நிற்பார். ஆடி 3வது திங்கட்கிழமையன்று பொங்கல் வைபவம் நடக்கும். அப்போது பூஜாரி அருள்வாக்கு சொல்லியபடி குதிரையின் மீதேறி வலம் வருவார். அப்போது குழந்தை இல்லாதவர்கள் மடி ஏந்தி எலுமிச்சம்பழ பிரசாதம் பெறுவர். இதை பெற்றவர்கள் அய்யனாரின் அருளால் அடுத்த ஆண்டு குழந்தையுடன் தரிசிக்க வருவர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி வீதியுலா நடக்கும்.
எப்படி செல்வது: மேல்மருவத்துாரில் இருந்து 9 கி.மீ., மதுராந்தகத்தில் இருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 96986 40167
அருகிலுள்ள தலம்: ஏரி காத்த ராமர் 1 கி.மீ.,
நேரம்: காலை 7:30 – 11:30 மணி, மாலை 4:30 – 8:30 மணி
தொடர்புக்கு: 98429 09880, 93814 82008.