சுவாமியே சரணம் ஐயப்பா-1: தினம் ஒரு தகவல்: அதிர்ஷ்டம் உண்டாக...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2025 11:11
அதிர்ஷ்டம் உண்டாக... : கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் சபரிமலை நம் நினைவுக்கு வரும். அங்கு செல்ப வர்கள் விரதம் இருந்து மாலை அணிவர். அப்போது அவர்கள் சொல்லும் மந்திரம் சுவாமியே சரணம் ஐயப்பா. இதை ஏன் சொல்கிறார்கள்? தலைவனாகிய ஐயப்பா... உன்னை சரண் அடைகிறேன் என்பது இதன் பொருள். இதைச் சொன்னால் பேராசை, கோபம் நம்மை விட்டு மறையும். நல்ல புத்தி வரும். அதிர்ஷ்டம் உண்டாகும். மாலை அணிந்தவர்கள் மட்டும்தான் இதை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. யார் வேண்டுமானாலும் தினமும் 108 முறை சொல்லலாம். முடியாதவர்கள் காலை, மாலையில் 21 முறை சொல்லலாம். அதுவும் இயலாவிட்டால் கீழ்க்கண்ட சரணங்களை மட்டும் சொல்லுங்கள்.